Sunday, May 10, 2015

யெமன் பிரச்சினையும் ஷீஆக்களின் எதிர்காலத்திட்டமும்






யெமன் பிரச்சினையும் ஷீஆக்களின் எதிர்காலத்திட்டமும்
==================================

 01)  இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில்  ஏன் எமன் பிரச்சினை பற்றி  அறிய வேண்டும் ?

01) நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற வகையில்  எமன் பற்றி அறிவது  கட்டாயக்கடமையாகும் .

02)  இலங்கையின் வம்சாவளிக்கும் யெமனுடைய வம்சாவளிக்கும் அதிகமான தொடர்புகள் உள்ளது .   யெமனிலிருந்துதான்  இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்துள்ளார்கள் .  அவர்கள்  வேருவளை , காலி ,  களுத்துறை . போன்ற சில பிரதேசங்களில் குடியமர்ந்து தமது வணிகங்களை  மேற்கொண்டார்கள்  என்று இலங்கையின் வரலாறுகள் சொல்லித் தருகின்றது  . அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் சற்று அதிகமாக எமன் பற்றி அறிய வேண்டும் .

02) யெமனில் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் என்ன ? இந்தப் பிரச்சினை யார் யாருக்கு மத்தியில் இடம்பெறுகின்றது  ?

யெமனிலே 70% வீதமானவர்கள் அஹ்லுஸுன்னா வல் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் . 30 % வீதமானவர்கள் ஷீஆக்கள் .இவர்கள் ஸுன்னியர்களின் ஆட்சியினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் . இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சில உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றது என்று சொல்லி
''அலி பதுருத்தீன் அல்ஹூதி ''என்பவரின் தலைமையில் ஒரு போராட்டக் குழு ஒன்றை  உருவாக்கினார் . இவரினால் உருவாக்கப்பட்ட அந்தக்குழுதான்  ''ஹூதிகள் '' இவர்கள்தான் இன்று மன்ஸுர்  ஹாதியின்  தலைமையில் இருந்த  அரசுடன் போராடி எமனில் முக்கியமான பிரதேசங்களை இன்று  தனது கட்டுப்பாட்டின்கீழ்  கொண்டுவந்துள்ளார்கள் .

03) சிறுபான்மையினராக இருந்த ஷீஆ ஹுதிபோராழிகள் எப்படி  எமன் இராணுவத்துடன் போராடி ஆட்சியைக் கைப்பற்றினார்கள் ? அவர்கள் போராடுவதற்கான ஆயுதம் எங்கிருந்து வந்தது ?
ஈரானுக்கு ஒரு கனவு இருக்கின்றது 2030 இல்  சர்வதேச ஈரான் குடியரசு ஒன்றை உருவாக்குவதே இவர்களின்எதிர்காலத்திட்டம் . அதற்கமைய ஷீஆ நாடுகள் . அதன் அமைப்புகள் ஒன்றினைந்து உலகத்தில் பல வேலைகளை கொண்டு செல்கின்றார்கள் . அதில் ஒரு திட்டம்தான் யெ மனின் ஸுன்னி ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஈரான் , லபனான் . பஹ்றைன் , போன்ற நாடுகள் ஆயுத உதவிகளை ஹூதிகளுக்கு கொடுத்து உதவுகின்றது . அது போதாமல் இப்போது தலீபான் தீவிரவாதிகளும் யெமனில் காலடி வைத்துள்ளார்கள் . இவர்களை விரட்டுவத்கு  சவூதி அரேபியாவின் தலைமையில் சில நாடுகள் இணைந்து ஷீஆ ஹூதிகளுக்கெதிராக விமானத் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றார்கள் .

04) யெமன் பிரச்சினையால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

01) யெமன் வறுமைக் கோட்டின் கீழுள்ள நாடுகளில் ஒன்று . தொடர்ந்து அங்கு தாக்குதல் இடபெறும் போது அதன் பொருளாதாரம் சில இயற்கை வழங்கள்  . கூடுதலான மனித அழிவுகள் என்பன கூடுதலாக இடம்பெறும்  . எனவே இதற்கு சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் .

 ஹபீஸ் அப்துல் முத்தலிப்

No comments:

Post a Comment