Saturday, May 23, 2015
குற்றத்தை மறைப்பதற்காக மீண்டும் இனப்பிரச்சினையைத் தூண்ட முயற்சிக்கும் இனவாதிகள் .
கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பல இனவாதச் செயல்கள் அரசியல்ரீதியாக தலைவிரித்தாடியது . இதற்கு சர்வதேச இனவாத சக்திகளும் பக்கபலமாக இருந்தது . அதேபோல்
அரசியல்வாதிகளில் சிலர் ஆதரவு வளங்கினார்கள் . இதை சாதகமாகப் பயன்படுத்தி இனவாதிகள் தெவனகல , தம்புள , அளுத்கம , போன்ற இடங்களில் தான் விரும்பியபிரகாரம் ஆடுவதற்கு ஆரம்பித்தார்கள் . இதை நீதிமன்றங்கள்கூட காது தாழ்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது . இது உலகம் அறிந்த உண்மை .
ஆனால் இன்று புதியதொரு ஆட்சி வந்ததன் காரணமாக இனவாதிகளுக்குத் தான்விரும்பியபிரகாரம் ஆடுவதற்கு முடியது . அதேபோல் அவர்களுக்கு இனப்பிரச்சினையைத் தூண்டிய காரணத்திற்காகவும் , சில இனக்கலவரங்களை வடிவமைத்ததற்காகவும் நீதிமன்றத்திலும் , குற்றப்புனாய்வுத்துறையாலும் விசாரணை சென்று கொண்டுள்ளது இதை திசை திருப்புவதற்காக இன்று இனவாதிகள் வில்பொத்துப்பிரச்சினை என்ற பெயரில் இனப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்கள் இது குறித்து முஸ்லிம்களாகிய நாங்கள் கவனமாக இருத்தல் வேண்டும் . எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதுகுறித்து கவனத்திற் கொள்ள வேண்டும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment