Monday, May 11, 2015

முஹம்மத் முர்சி



ஏன் முஹம்மத் முர்சியை ஆட்சி கவிழ்ப்பதற்கு மேற்குலகு எகிப்தின் இராணுவத்திற்கு உதவியது?
===+==+==+==+=+==+===+==+==+==+==+
 பாருங்கள் பகிருங்கள் இறைவன் அருள் புரிவான் .

 01) முஹம்மத் முர்சி.  இவர் யார் ?
இவர் எகிப்தின் தற்போதைய உத்யோக பூர்வமான ஜனாதிபதி .

02) இவருடைய சிறப்பு என்ன ?
இவர் குர்ஆனை மனனம் செய்த ஒரு  ஹாபிழ் . இஸ்லாமிய ஷரிஆ துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு தாயி  . அதேபோல் பொருளியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற சிறந்த பொருளியலாளர் .

03) எதற்காக சர்வதேச உலகம் இவரை  எதிர்த்தது ?

கரணம் இவர் எகிப்தின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற போது இவர் இரண்டு வேலைத்திட்டங்களை மேற் கொண்டார் .
01) சுயஸ் கால்வாய் திட்டம் . இந்தத் திட்டமானது  எகிப்தின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒரு திட்டம் . இந்தத்திட்டம் வெற்றிபெற்றால் உலகத்தில் பல நாடுகளுடைய பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து விடும் .

 .02) எகிப்திற்கும் , பலஸ்தீனுக்கும் எல்லையில் உள்ள ரபா எல்லை , இதனை  பலஆண்டுகளாக  ஜமால் அப்துன் நாசர் என்ற எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனின் உதவியுடன் இஸ்ரேல் மூடவைத்தது . காரணம் இதனூடாகத்தான் ஹமாஸுக்கு ஆயுதங்கள் போகின்றது என்று இந்த எல்லையை மூடவைத்தது . இதை முஹம்மத் முர்சி  திறந்து வைத்தார் .

03) இவர் பதவி கவிழ்க்கப்படுவதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ? என்பீர்கள்.

காரணம் ரபா எல்லையைத் திறந்தால் ஹமாஸ் பலம்பெற்றுவிடும் .அதேபோல் அவர்கள் குதுஸை மீட்பதற்கு இலகுவாகிவிடும் . எனவே ஹமாஸ் பலம்பெ றக்கூடாது .  அப்படி பலம்பெற்றால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகி விடும் . இதனால் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு இஸ்ரேலை பாதுகாப்பது கடினமானதாக மாறிவிடும். என்ற காரணத்திற்காக அரபு நாட்டின் சில குள்ள நரிகளுக்கு பணம் கொடுத்து அந்த எல்லையை மேற்குலகு மூடவைத்தது  . இது வெளிப்படையான உண்மை .

அதேபோல் இன்று அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டல்   உலகத்தில் பல முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துவிடும் என்று  இதை விளங்கிய சில நாடுகள் முர்சியுடைய ஆட்சியை வீழ்த்துவதற்கு எகிப்து இராணுவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது .

இன்னுமொரு மிகப்பெரிய காரணம் . முஹம்மத் முர்ஸி இஃவானுல் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர் . என்ற காரணத்தினால் அவருடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சில நாடுகள் ,சில முஸ்லிம் இயக்கங்கள் இராணுவத்திற்கு உதவியது . ஏன் இஃவான்களை எதிர்க்க வேண்டும் ? காரணம் அவர்களுடைய சிந்தனை மன்னராட்ச்சி இடம்பெறும் நாடுகளில் பரவினால் மன்னர்களின் ஆட்சிக்கு ஆபத்தாக அமையலாம் . என்ற காரணத்திற்காக அவர்கள் முஹம்மத் முர்ஸிக்கு எதிராக எகிப்திய இராணுவத்திற்கு தனது ஆதரவுகளை வழங்கினார்கள் .

குறிப்பு :- இன்று முகநூலினூடாக  இஃவான்களைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை  மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள் . இது குறித்து  நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்  .  . . அதேபோல்  இதை  எழுதும் காலமெல்லாம்  அவர்கள் எதிர்த்துக் கொணடே இருப்பார்கள் .  அந்த பொய்யான தகவல்கள் கொடுப்பவர்கள் commnet பன்னுவார்கள் அவர்கள் யார் என்று உங்களுக்குப் பார்க்க முடியும் .......

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

No comments:

Post a Comment