நோன்பு மாதம் நன்மையைக் கொள்ளையடிக்கும் மாதம் . எமது பெற்றோரை திருப்திப்படுத்திடுவோம் இறைவன் எமக்கு அருள் புரிவான் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மூன்று பேர் நடந்து சென்றுகொண்டி ருந்தபோது திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் ஒதுங்குவதற் காக ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகை வாசலை அடைத்துக் கொண்டது. வெüயேற முடியாமல் திணறிய) அவர்கள் மூவரும் அப்போது தமக்குள், "நாம் வேறெவருடைய திருப்திக் காகவுமின்றி அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன் வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இப் பாறைதனை நம்மைவிட்டு அகற்றிவிடக்கூடும்'' என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்கüல் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்கüடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்துகொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தை யருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே வீட்டுக்கு வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக்
கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதை யும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் பசியால் கதறிக்கொண்டி ருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப்
பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் பின்வருமாறு வேண்டி னார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். ஒரு நாள் அவüடம் அவளைக் கேட்டேன். நான் அவüடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர எனக்கு இணங்க முடியாதென அவள் மறத்துவிட்டாள். நான் முயற்சிசெய்து, அந்த நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள் "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய (சட்ட பூர்வ) உரிமையான திருமணம் இன்றித் திறக்காதே'' என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். இறைவா ! இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்திடுவாயாக!
அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்கு (இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.
மற்றொருவர் பின்வருமாறு வேண்டி னார்:
இறைவா! நான் ஒரு "ஃபரக்'
அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை பணிக்கு அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவுடன், "என்னுடைய உரிமையைகூலியைக் கொடு'' என்று கேட்டார். நான் நிர்ணயித்தபடி அவரது உரிமையை கூலியை அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்டுச் சென்று விட்டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர் களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் ஒருநாள் அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்.
அதற்கு நான், "அந்த மாடுகüடத்திலும் அவற்றின் இடையர்கüடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)''
என்று சொன் னேன். அதற்கு அம்மனிதர், "அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!'' என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்'' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்த படி நடந்தார்.
இறைவா ! நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீஅகற்றிடுவாயாக!
அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு முழுமையாக அகற்றி விட்டான்.
இவ்வாறுதான் நாங்கள் செய்கின்ற செயலை தூய்மையாகச் செய்தால் அதற்கான கூலியை எமக்கு இறைவன் தருவான் . எமது தாய் தந்தையை பாராமரிப்பதன்னூடக சுவர்கம் இறைவன் அருள் புரிவானாக ! ஆமீன் .....
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
வரிப்பத்தான்சேனை