Monday, June 15, 2015

யார் இந்தக் காதியானிகள் ?


================================

இவர்கள் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டில்  முறன்பட்டவர்கள். இந்த சிந்தனை குலாம் அஹ்மத் என்பவரால் கி.பி. 1880 இல்  இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் கூர்தாஸ்பூர் மாவட்டத்தில் காதியான் என்ற நகரில் இந்த சிந்தனையை பரப்ப ஆரம்பித்தான்  . கி.பி. 1885 இல் தான் ஒரு முஜத்தித் என்பதாகவும்  கி. பி. 1901 இல் தனக்கு நுபுவ்வத் வழங்கப்பட்டதாகவும் போலியான பிரச்சாரம் செய்தான்.

அத்துடன் நின்று விடாது அனைத்து நபிமார்களையும். ரஸுல்மார்களையும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் விட தான் உயர்ந்தவன் என்று குறிப்பிட்டான்.  றாபிதத்துல் ஆலமில் இஸ்லாமீ எனும் சர்வதேச அமைப்பு கி.பி. 1974  ஏப்ரல் மாதம் மக்காவில் நடைபெற்ற மாநாட்டில் காதியானிகள் காபிர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது .

எனவே இவர்களின் பரவல் தென் இந்திய நாடுகளில் காணப்படுகிறது . குறிப்பாக இந்தியா . இலங்கை (நீர் கொளும்பு ) போன்ற இடங்களில் பரவலாக உள்ளனர் . எனவே இது குறித்து நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் .

காதியானிகளின் கொள்கைகள்
-------=======-----====--

1) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மிர்ஸா குலாம் அஹ்மத் அல் - காதியானி என்பவர் நபியாவார்.

2) ஈஸா அலை அவர்கள் மரணித்து விட்டார்கள் . அவர்கள் மீண்டும் உலகிற்கு வரமாட்டார்கள். நான் தான் அந்த ஈஸா என்று கூறினான்.

3) மரணித்தவர்களுக்கு கேள்வி கணக்கிற்காக எழுப்பப்பட மாட்டார்கள் .இது குறித்து அல்குர்ஆனில் எந்த வசனமும் இல்லை .

4) மிர்ஸா குலாம் கஷ்பின் மூலம் மிஃராஜ் மேற்கொண்டார்.

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
வரிப்பத்தான்சேனை .

No comments:

Post a Comment