Friday, June 26, 2015

சீனா அரசு சீனஉய்குர் முஸ்லீம்களுக்கு நோன்பு நோற்கத்தடை விதித்துள்ளது


சீனாவின் உய்குர் எமது  முஸ்லிம் சகோதரர்களுக்கு   விடிவு  கிடைக்க வேண்டும் முகநூலினூடாக உலகிற்கு  எடுத்துக் காட்டுவோம் .

சீனா முஸ்லிம்களின் வரலாற்றைப் பொறுத்தவரை மிகப்பழமைவாய்ந்தவை . இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாவதற்குமுன் சீனாவில் இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது .
அதேபோல் சீனாவின் வளர்ச்சிக்கு சீனா முஸ்லிம்களின் பங்களிப்பு அளவிடமுடியாது .
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார். என்று சில ஆய்வாளர்கள் கூறுவார்கள் . (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அதேபோல் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமுள்ளது .

சீனாவில் உய்குர்  முஸ்லிம்கள் ''சின்ஜியாங்''' பிராந்தியத்தில்தான் அதிகம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் . அதேபோல் அதுதான் கணிமமுள்ள செழிப்பான பிரதேசம் என்பதால் அரசின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது  .  எவ்வாறு என்றால் வேலை
நாட்களில்  மாணவர்கள் , அரச ஊழியர்கள் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு.  ,
அன்றிலிருந்து இன்றுவரையும் உய்ரற்ற பிணமாககத்தான் சீனா முஸ்லிம்களைப்பார்க்கின்றது .

எனவே இவர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் முகநூலினூடாக உலகிற்கு  எடுத்துக் காட்டுவோம் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment