Monday, June 15, 2015

மதம்மாறும் இலங்கை முஸ்லிம்கள்

 

இன்று இஸ்லாம்    2.9  என்ற வீதத்தில் மிகவேகமாக ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கொண்டே செல்கிறது .  இதைப்பார்கின்ற போது ஒரு வகையில் சந்தோசம்தான் .
என்றாலும் ஒரு கவலை .   இலங்கையைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் இஸ்லாம் அன்னிய மதத்தவர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டே செல்கின்றது . 
அன்மையில் இலங்கையில் இஸ்லாத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில்  ஒர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் இஸ்லாத்தில் இருந்து மதம்மாறியவர்கள் பற்றியும் தரவுகள் ஒன்று திரட்டப்பட்டது . அதிலும்  கொளும்பு மட்டக்குளியில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக இஸ்லாத்தில் இருந்து கிட்டத்தட்ட 300 பேர் மதம் மாறியுள்ளார்கள் . அதேபோல் ஒரு முஸ்லிம் சகோதரர்  தனது மகளின்  நினைவுக்காக புத்தர் சிலை ஒன்றை  நிர்மானித்துக் கொடுத்துள்ளார் .   இதுதான் இன்னறய முஸ்லிம்களின் நிலை .   நாங்கள் இஸ்லாத்திற்கு வருகின்ற வீதத்தைப் பார்த்து சந்தோசப்படுகின்றோம் ஆனால் இஸ்லாத்தில் இருந்து மதம்மாறுபவர்களைப் பார்பதில்லை . இஸ்லாத்திற்கு வருவவர்களைப்போன்று இஸ்லாத்தில் இருந்தும்  மதம் மாறுகின்றார்கள் .இதற்குக் காரணம் என்ன ? இதற்குக் காரணம் வறுமை .  எனவே இதை தடுப்பதற்கான சிலவழிமுறைகளை கையாள வேண்டும் . இது தனிமனிதனின் பிரச்சினையல்ல முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை .

இவர்கள் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியதற்காக இறைவனிடத்தில் எமது  முஸ்லிம் சமூகம் நிச்சயமாக பதில்கூறியே ஆகவேண்டும் . இலங்கை முஸ்லிம்களே இது உங்கின் கவனத்திற்கு ........

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
�(பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment