Monday, June 15, 2015

றமழான் மனிதனுடன் பேசுகின்றது .


மனிதா ! நான் உன்னுடைய மாதம் . உன்னுடைய பாவங்களை சுட்டுப் பொசுக்க வந்துள்ளேன் .

நான் ஒரு வருடத்திற்கு ஒருமுறைதான் வருவேன் அதனால்
என்னை நீர் நன்றாகப் பயன்படுத்திக் கொள் . என்னை நீர் நன்றாக பயன்படுத்தினால் இறைவன் உனக்கென்று  சுவர்கத்தில் தனியான ஒரு வாசலைத் தயார்படுத்தி  வைத்துள்ளான் . அதேபோல் அந்த வாசலில் என்னை சரியாகப் பயன்படுத்தியவர்கள்தான் நுழைவார்கள் ஆகவே என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொள் .

அதிகம் குர்ஆனை ஒதிக் கொள் . பேச்சுக்களை குறைத்துக் கொள் .ஏனென்றால் உலகில் அதிகம்    சிறை வைக்க வேண்டிய ஒரு மனிதனின்  உறுப்பு நாவு . பிறருக்கு அதிகம் ஸதகா செய்து கொள் அது உனது பாவத்தை அழித்துவிடும்  எனவே முடியுமானவரை இவ்வனைத்தையும்  பின்பற்ற முயற்சி செய் மனிதா .

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக்  ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment