..............................................................
தொகுதிவாரி தேர்தல் முறை அரசங்கத்தால் அமுல்படுத்தப்பட உள்ளது . இது முஸ்லிம்கள் பாரளா மன்றத்திற்கு தெரிவாகும் வீதம் குறையும் அபாயம் உள்ளது எனவே இந்த சட்டத்தை அமுல்படுத்த இரண்டு வாரங்கள் உள்ளது இதை எமது முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றினைந்து முஸ்லீம்களுக்கு சாதகமான ஒரு தீர்வை பெறவேண்டிய தேவை இருக்கின்றது எனவே இந்த செய்தியை அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குத் தெரியப்படுத்தவும்..
இந்தத் திருத்தச் சட்டமானது முஸ்லிம்களுக்கு புதிதான ஒரு விடையமல்ல .இதேபோன்ற அரசியல் சீர்திருத்தங்கள் 1981, 1984, 1988, போன்ற ஆண்டுகளில் அதிகம் இடம்பெற்றுள்ளது . ஆனால் அந்த சீர்திருத்தங்களில் முஸ்லிம்களுக்கு சம அளவான பிரதிநிதித்துவம் வளங்கப்பட்டுள்ளது . இது இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்தது முஸ்லிம்களுக்கு சமமாகத்தான் பகிந்தளிக்கப்பட்டுள்ளது . ஆனால் கடந்த 2015- 06-08 அன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட புதிய 20 ஆவது திருத்தச்சட்டம் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது . இதில் அமுல்படுத்த இருக்கும் தொகுதிவாரி தேர்தல் முறை எங்களுடைய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழக்கு வாய்ப்பு உள்ளது .
.20 ஆவது சீர்திருத்தச் சட்டமானது
கடந்தகாலத்தெரிவுகளைப் போன்றல்லாமல் தொகுதிவாரியான தெரிவு முறையொன்றை தற்கால அரசு பாராளமன்றத்தில் முன்மொழிந்துள்ளது . அதில்
இலங்கை
தேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 168 தொகுதிகளில் உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது. இந்தத் தேர்தல் கணிப்பிட்டு முறை பிழையானது . இந்தத் தேர்தல் மூலம் தகுதிவாய்ந்த கட்சிகளுக்கு பாராளமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றே அரசு தொகுதிவாரியான தேர்தல் கணிப்பு முறையை அறிமுகப்படுத்தி இருக்கின்றது . இது பெரும்பான்மையினருக்கு நன்மையாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கும் , சிறுபான்மைக் கட்சிகளுக்கும் ஆபத்துக்கள் இருக்கின்றன .
தற்போது நடைமுறைப் படுத்த இருக்கும் தொகுதிவாரி முறையில் 168 ஆக
இருந்த தொகுதிகள் 125 ஆக குறைத்து , மாவட்ட விகிதாசாரம் 75 ,தேசிய விகிதாசாரம் 25 ஆகக் குறைத்து 255 தாக இருந்த பாராளமன்ற அங்கத்துவத்தை 225 ஆக குறைப்பதற்கான ஒரு முறைதான் இது . அதேபோல் இந்த முறைமூலம் ஒரு தொகுதியில் ஒருவர்படி 125 தொகுதிகளில் 125 போர் பாராளமன்றத்திற்கு தெரிவாக்கப்படுவர் .
இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் , தேசியக்காங்ரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , NFGG , போன்ற கட்சிகள் ஒரு தொகுதியில் போட்டி இட்டு பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது கடினமானதாக மாறும் .
அவ்வாறு இந்தக் கட்சிகள் தேசிய ரீதியில் போட்டியிடும் போது முஸ்லிம்கள் 50 % சதவீதத்திற்கு மேலாக வாழ்கின்ற தொகுதிகளில் மாத்திரம்தான் முஸ்லிம் பிறதிநிதியை எடுக்கமுடியும் . உ+ம் = சம்மாந்துறைத் தொகுதி , கல்முனைத் தொகுதி , பொத்துவில் தொகுதி , மூதூர் தொகுதி , புத்தளத் தொகுதி ) இது போன்ற தொகுதிகளில் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கு உறுதியாக பாராளமன்ற அங்கத்துவம் கிடைக்கும் என்று எங்களால் கூற முடியும் . ஆனால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் தொகுதிகளில் முஸ்லிம்களுக்கென தனியான ஒரு பாராளமன்ற அங்கத்துவம் பெறுவது சாத்தியமற்ற ஒன்றாக மாறும் . 22 தேர்தல் மாவட்டங்கில் , 18 மாவட்டங்களில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்கிறார்கள் . இதில் விகிதாசார அடிப்படையில் பார்கின்றபோத 22 / 23 முஸ்லிம் பாராளாள மன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளார்கள் ஆனால் தொகுதிவாரி தெரிவுமுறையைப் பார்கின்ற போது ஆகக் கூடிய முஸ்லிம்களாகிய எங்களுக்கு வெறும் 8 பாராளமன்ற உறுப்பினர்கள்தான் கிடைக்கும் . எனவே முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் தொகுதிகளில் குரல் கொடுக்கும் எவரும் இருக்க மாட்டார்கள் .
எனவே இதற்கு என்ன தீர்வு ?
இதனால் தமிழ் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது . காரணம் அவர்கள் வடமாகாணத்தில் செறிந்து வாழ்கின்றார்கள் . அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் அனைத்தும் கிடைக்கும் . ஆனால் முஸ்லிம்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை ஏற்படும் . காரணம் நாங்கள் நாடு பூராக கலைந்து வாழ்கின்றோம் .
இன்னும் ஒரு பிரச்சினை உள்ளது அரசாங்கத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு King Maker ஆக முஸ்லிம் காங்கிரஸ்தான் காலாகாலம் திகழ்ந்து வந்தது . ஆனால் எதிர்வருகின்ற ஆட்சியில் நேரடியாக இலங்கை தமிழரசு கட்சி (ITAK) பெரும் செல்வாக்குள்ளதாக மாறப்போகின்றது. எமது முஸ்லிம் கட்சிகள் King Maker செல்வாக்கினை இழக்கப் போகின்றது .
இதற்கான தீர்வாக இரண்டு முஸ்லிம் கெபினட் (Cabinet) கட்சிகள் இரட்டை வாக்குச் சீட்டு முறை ( Double voting system ) என்ற ஒரு ஆலோசனையான முன்வைத்தது . அதனை அரசு நிராகரித்துவிட்டது.
இந்தத் தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் வந்ததால் முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே இதனைத் தவிர்ப்பதற்கு நாங்கள் மாவட்ட ரீதியில் அல்லது மாகாணரீதியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது எடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் , முஸ்லிம் சமூக அமைப்புகள் , முஸ்லிம் சட்டத்தர்ணிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குழுவை நியமித்து உத்தியோக பூர்வமான ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் . இதுதான் எனது நிலைப்பாடு.
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் கல்வி நிர்வனம் ) வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment