மாயிஸ் பின் மாலிக் (ரழி) என்ற ஒரு நபித்தோழர் மதீனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கை நடாத்தி வந்தார். அப்போது ஒரு நாள் அன்சாரி பெண்ணொருவருக்கும் அவருக்கும் இடையில் எதிர்பாராதவிதமாக தனிமையில் ஒரு சந்திப்பு ஏற்ப்பட்டது . அப்போது ஒரு அன்னிய ஆனும் பெண்ணும் தனிமையாக இருக்கும் போது அவர்களுடன் மூன்றாம் நபராக ஷைத்தான் சேர்ந்து விடுகின்றான் . அவர்கள் இருவரதும் உள்ளங்களிலும் ஷைத்தான் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஆசையை ஏற்ப்படுத்தி விடுகின்றான். எதிர்பாராதவிதம் இருவரும் தடுக்கப்பட்ட பெரும் குற்றமாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டார்கள் .
அதன்பிறகு மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் அந்தப் பெண்ணும் விழித்துக் கொள்கின்றார்கள் அப்போதுதான் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தான் மிகப்பெரும் பாவமொன்றைச் செய்து விட்டதாக உணர்கின்றார்கள். தன்னால் தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் கலங்கம் ஏற்ப்பட்டு விட்டதாக எண்ணிக் கைசேதப்பட்டார் .
அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் கொண்டிருந்த அதித அன்பு அவர்களை அந்தச் செயலை தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை .
ஆதலால் உடனடியாக நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச் செல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களை சந்தித்து தனது கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது கதறியழுதபடி அல்லாஹ்வின் தூதரே ! இந்த அடியான் விபச்சாரம் செய்து விட்டான் இவனைப் பரிசுத்தப்படுத்துங் என்று கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகின்றார்கள் எனவே நபி (ஸல்) அவர்களிடம் அடுத்தப் பக்கமாக நெருங்கி வந்து மீண்டும் அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங் . என்று வேண்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங் என்று வேண்டினார்.
ஆதன் போதும் நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். அதன் பிறகும் சிறிது நேரம் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப்பரிசுத்தப்ப என்று மூன்றாவது முறையாகவும் வேண்டினார்.
இவ்வாறே நான்காவது தடவையும் நபி (ஸல்) அவர்களிடம் மாயிஸ் (ரழி) அவர்கள் முறையிட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று முறையும் சொன்ன உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு எனும் பதிலையே சொன்னார்கள்.
மீண்டும் ஐந்தாவது முறையாகவும் மாயிஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிடவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு நாசம் உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கூறி விட்டு அங்கு வீற்றிருந்தவர்களிடம் இவருக்கு ஏதும் பித்துப்பிடித்திரு என்று கேட்டார்கள்.
அதற்க்கு அங்கு வீற்றிருந்தவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அப்படியொன்றையு நாம் அறியோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் இவர் மது அருந்தியிருக்கலா என்று கேட்டார்கள் அப்போது ஒரு நபித் தோழர் அவரின் வாயை முகர்ந்து பார்த்து விட்டு அவ்வாறு மது அருந்தியதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என்று கூறினார்.
அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு கேடு உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கேட்குகின்றார்கள் அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் ஆம் எவ்வாறு ஒரு மனிதன் ஒரு பெண்ணிடம் ஹலாலான அனுமதிக்கப்பட்ட முறையில் செல்வானோ அவ்வாறே நான் ஹறாமான தடுக்கப்பட்ட முறையில் சென்று விட்டேன் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இப்போது உனது இந்த கூற்றின் மூலம் உனது எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள். அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் தாங்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு அவரை கல் எறிந்து கொலை செய்தல் எனும் சட்டத்தை நிறைவேற்றுமாறு பணித்தார்கள் . அதன் பிறகு அவர் கல் எறிந்து கொலை செய்யப்பட்டு விடுகின்றார்.
அவ்வாறு கல் எறிந்து கொலை செய்யப்பட்டு அவருக்குரிய தொழுகைiயும் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்படதன் பிறகு ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் சில நபித் தோழர்களுடன் மாயிஸ் (ரழி) அவர்களின் மண்ணறைப் பக்கமாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது இரண்டு நபித் தோழர்கள் இதோ பார்த்தாயா இந்த மண்ணறை யாருடையது என்று இவர்தான் அவர் செய்தத் தவறை அல்லாஹ் மறைத்த போதும் அதனை அவரால் மறைத்துக் கொள்ள முடியாது நாயைப் போன்று கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இது நபி (ஸல்) அவர்களில் காதில் விழுந்து விடுகின்றது.
என்றாலும் நபி (ஸல்) அந்த இடத்தில் எதுவும் பேசாது மௌனமாகச் சென்று கொண்டிருந்தார்கள் சற்று தூரம் சென்றவுன் இறந்து உக்கிப்போன ஒரு கழுதையைக் கண்டார்கள் உடனே அந்த குறித்த இரண்டுத் தோழர்களையும் அழைத்தார்கள் அப்போது அவர்களிருவரும் இதோ இருக்கின்றோம் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கூறினார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் இறங்கி இந்தக் கழுதையைப் புசியுங்கள் என்று கூறினார்கள்.
அதற்க்கு அவர்களிருவரும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அல்லாஹ் உங்களுக்குப் பிழைப் பொறுப்பானாக இதனை யார் சாப்பிடுவார் என்று கூறினார்கள் அதன் போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் சற்று முன்னர் உங்கள் சகோதரனைப் பற்றி இழிவாகப் பேசியது இருக்கின்றதே அது இந்த செத்த பிணத்தைத் உண்பதிலும் பார்க்க மிக மோசமானதாகும் என்று கூறினார்கள்.
பிறகு நீங்கள் தவறாகப் பேசி அவர் தனது தவறை நினைத்து வருந்தி கைசேதப்பட்டு அவர் செய்த தௌபா இருக்கின்றதே அதனை ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து நிற்க்கும் எனது உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவர் தற்பொழுது சுவனச் சோலையின் நீரருவிகளில் நீந்திக் கொண்டிருக்கின்ற மாயிஸ் பின் மாலிக்கிற்க்கு சுபசோபனம் உண்டாட்டும். ஆம் அவர் விபச்சாரத்தில் வீழ்ந்தார் என்றாலும் அவர் செய்த தௌபா ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து விடும் அளவுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள்.
மேற்ப்படி சம்பவம் புஹாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புகளில் சிற்ச்சில மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது. இங்கே நான் கூறி இருப்பது அவை அனைத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பேயாகும்
ஹபீஸ் அப்துல் முத்தலிப் .
பாதிஹ்
வரிப்பத்தான்சேனை - 01
.
No comments:
Post a Comment